
இரண்டு நாட்களாக
நான் காணவில்லையென்று
புகார் மனுக்கள் குவிந்து கிடக்கின்றன...
இணையத்திற்குள்
தொலைந்திருக்க வாய்ப்புகளில்லை
எங்காவது தட்டுப்பட்டிருப்பேன்...
அடிக்கும் வெயிலில்
உருகியிருக்கலாம் என்பது...
சிலரின் கருத்து...
எழுத்துகளோடு போனவன்
எங்காவது
புதைச்சொற்களில் சிக்கியிருக்கலாம் என்பது
அன்பின் வாதம்...
கவிதையின் கிணறு வரண்டுவிட்டதால்
தாகத்தில் தவித்தும் செத்திருக்கலாம்...
யோசனைகளின் தூரத்தை
எளிதில் கடந்தவன்
வழியறியாமல் தொலைந்திருப்பேனாம்.....
என்னதான் நடந்தது?
திருமண விருந்தொன்று என்னை
அள்ளித் தின்ன...
சற்றேயதிகம் அசந்துறங்கிவிட்டேன்...
கிழிக்காத திகதிகள் என்னை
வெறுப்போடு பார்த்துக் கொண்டிருக்க...
- மு.முகமது பாட்சா*
11 /03 /2019
No comments:
Post a Comment