
யார் யாரோ சப்தமிட்டு ஓடிவருகிறார்கள்
நானும் சப்தமிட்டபடியே
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
அவர்கள்
என்னைத் துரத்துபவர்களாக இருக்கலாம்..
இல்லையென்றால்
அவர்களுக்குப் பயந்து கொண்டு
நான் ஓடிக் கொண்டும் இருக்கலாம்...
எனக்கு முன்பாகவும்
சிலர் சப்தமிட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...
சப்தம் எங்கும் நிறைந்திருக்கிறது...
ஆனாலும்
புரியாமல்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்...
ஓட்டம் மட்டும் நிற்கவில்லை
- மு.முகமது பாட்சா*
16 /03 /2019
No comments:
Post a Comment