Thursday, 21 March 2019

மாற்றம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, பூ மற்றும் இயற்கை

அவர்களெல்லோருமே மாறிக் கொண்டார்கள் 
தேவதூதர்கள் தேவையில்லையென்று 
கடவுள்களுக்கு மடல் அனுப்பப்படுகிறது.... 
கடாட்சத்தை அவரவர்கள் 
கழுத்துகளில் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்... 
தெருக்கடை வியாபாரி 
தொழில் அதிபராகக் கோலோச்சுகிறான்... 
பிச்சைக்காரர்கள் 
தர்மம் செய்வதற்காக ஆட்களைத் தேடுகிறார்கள்... 
நதிகள் 
சுதந்திரமாக ஓடிவருகின்றன... 
தேர்தல் அறிக்கைகள் 
கனவுகளை விரித்துப் படுக்க 
நான் குறட்டைவிட்டதாகச் சொல்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
21/03/2019

No comments:

Post a Comment

Popular Posts