Monday, 18 March 2019

கருங்கடலில் நீந்துகிறேன் - கஸல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

கஸலுக்கான குறிப்பொன்றை 
எடுத்துக் கொண்டிருக்கிறேன் 
உன் கைக்குட்டையில் மிகைத்த வாசம்! 
வார்த்தைகளில் 
அடிக்கடி மின்னல் வெட்டுகின்றது 
உன் புன்னகையில் எத்தனை வெளிச்சம்! 
கருங்கடலில் 
நான் மட்டும் நீந்துகிறேன் 
கருப்பு ஹிஜாப்பிற்குள் இரண்டு மீன்கள்! 
எழுத்துகள் வானத்தில் பறந்து 
நட்சத்திரங்களாகின்றன 
முழு மதியை மறைத்துக் கொள்ளாதே! 
பூக்களெல்லாம் வாடிவிட்டதாகப் 
பூங்கொத்து அழுது கொண்டிருக்கிறது... 
பாதங்களை ஏன் மறைக்கவில்லை! 
என் கவிதையைக் காணவில்லை 
புகார் செய்யும் முன்பாக 
உன் இதயத்தைத் திறந்தேனும் பார்த்துவிடு!

- மு.முகமது பாட்சா* 
18 /03 /2019

1 comment:

Popular Posts