
நிலவைப் பார்த்து
என்னவென்று கேட்டவள் - இப்போதும்
ஆதிரை பாட்டி
அங்கேயே இருப்பதாக நம்புகிறாள்...
முத்தமென்பது - அன்பின்
மொழியென்று மட்டுமே அறிந்தவள்,
மிச்சமில்லாமல் இறைக்கிறாள்...
குட்டி பொம்மைக்குப் பாலூட்டித்
தாயாகிறாள்...
கதைசொல்லும் வேளையில் ம் கூட்டி
இடைவெளி நிறைக்கிறாள்...
பச்சரிப் பற்களைக்காட்டிப்
பழிக்கும் என் செல்ல மகளிடம்
எப்படிச்சொல்வேன்...
தேவதைகள் இங்கு வாழ்வதற்காக
கற்றுக் கொள்ளும் வித்தையை.........?
- முகமது பாட்சா*
29/03/2019
No comments:
Post a Comment