Saturday, 23 March 2019

அழுக்கு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தப் பெண் 
அரைகுறை ஆடை உடுத்தியிருந்தாள் 
அருகில் அமர்ந்தவள் 
கடலைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருந்தாள் 
கடலை முறுக்கு விற்பவர்கள் 
அடிக்கடி கடந்து போய்க் கொண்டிருந்தார்கள் 
நீ யார் என்று கேட்கத் தயக்கமாக இருந்தது 
அரசியல் பேசினாள் 
லெனின் மாசோ எல்லாம் வந்து விழுந்தார்கள் 
ஈவாவின் காதலைச் சிலாகித்தாள் 
பாசிசம் தேவையென்றாள் 
உலகம் அழிவதற்குக் 
காரணங்கள் அவசியம் மச்சான் என்றவள்... 
சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தாள் 
புகை வளையமிட்டது... 
காஃபியை விட மது உற்சாகம் என்றவள் 
தன்னை 
யோனியின் அழுக்கு என்று சொல்லிவிட்டு 
அழுது கொண்டே எழுந்து போனால் 
நான் 
அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் 
அவள் அமர்ந்த இடம் 
தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 

- மு.முகமது பாட்சா*
23/03/2019

No comments:

Post a Comment

Popular Posts