
நான் பேசுகிறேன் என்றதும்
அந்த நிமிடங்கள் உறைந்து நின்றன...
ஏழை மூதாட்டி சுருக்குப்பையை
அவசரமாக உதறிக்கொண்டிருந்தாள்
வங்கியில் உள்ள பணத்தையெடுக்க
பென்ஷன்தாரர்கள் விரைந்தார்கள்...
ஏடிஎம் முன்பாகக் கூட்டம் கூடி நின்றது...
தேர்தல் முடிவுகள்
இப்போதே அறிவிக்கப்படும் என்று
அச்சம் ஓதிக்கொண்டே நகர்ந்தது....
மிசா போன்று ஏதாவது
கடா வந்து தொலைக்கலாம் என்று
புரட்சிகள் இடம் தேடின...
பேசாதவர்கள் பேசித் தொலைக்கும்போது
இப்படித்தான் ஏதாவது நடந்துவிடுகிறது!
- முகமது பாட்சா*
27/03/2019
No comments:
Post a Comment