Sunday, 31 March 2019

என் துயரத்தில் அவள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இரவு

அவள் இறந்துவிட்டதாக 
யார் சொன்னார்கள்? 
என் துயரத்தில் 
வாழ்ந்து கொண்டிருக்கிறாள், 
என் உறக்கம் இப்போது விழித்திருக்கிறது... 
நான் அவளைப் பற்றித்தான் 
பாடிக் கொண்டிருக்கிறேன்... 
என் மகிழ்ச்சி அவளோடு இருக்கும் போது , 
என் கவிதைகள் அவளோடு பேசும் போது, 
என் வெளிச்சம் அவளோடு திரியும் போது 
அவள் மட்டும் எப்படி இறந்திருப்பாள்? 
பார்க்காத கடவுளிடம் 
நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது 
இந்தக் கேள்வியை 
நான் யாரிடமும் கேட்டதில்லை... 
இப்போது கூட அவள் 
உங்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறாள்... 
நான் 
அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
31/03/2019

No comments:

Post a Comment

Popular Posts