
ஒரு நாயின் பின்னால்
சில நாய்கள் செல்கின்றன...
நாய்கள் பேசிக்கொள்வதும் கூட
குரைப்பதாகவே கேட்கிறது...
நாய்கள் மட்டுமே
எல்லைச் சண்டைகள் போடுகின்றன
நாய்கள் சோற்றுக்கு அடித்துக் கொள்கின்றன
நாய்கள் இடம் பார்க்காமல்
புணர்ந்து கொள்கின்றன...
நாய்கள் குட்டிகள் போட்டால்
நாலாபுறமும் விசும்பல் சப்தம்...
நாய்கள் நன்றி காட்டுகின்றன..
நாய்கள் காவல் காக்கின்றன...
நாய்கள் கடித்தால் ஊசிகள் கடிக்கும்..
நாய் காலை தூக்குகிறது
நாய்களில் எந்த நாய் பமோரியன்?
இவையெல்லாம் நாய்களல்ல
படிமங்களென்றால்
ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்?
- மு.முகமது பாட்சா*
30/03/2019
No comments:
Post a Comment