Thursday, 28 March 2019

காணாமல் போனவன் தேடாதீர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி மற்றும் குளோஸ் அப்

காணாமல் போனபிறகுதான் 
இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன்... 
என்னை யாரும் தேடாதீர்கள் 
நான் தொலைந்த இடம் 
உங்களில் யாருக்கும் தெரியாது... 
சிறகுகள் இருந்திருந்தால் 
நானே பறந்து வந்திருப்பேன்... 
கனவுகளில் நடந்தவன் 
கற்பனைக்குள் புதைந்துவிட்டேன்... 
உறவுகளின் மொழியறியாதவன் 
பாசங்களைப் பற்றியெழுதுவது பரிதாபம் 
இளமையைத் தின்றுவிட்டு 
முதுமைக்குப் பிச்சைக் கேட்பது 
என்ன நியாயம்? 
முகவரிகள் 
எப்போதும் யாருக்கும் சொந்தமில்லை... 
காணாமல் போனபிறகுதான் 
இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன்... 
என்னை யாரும் தேடாதீர்கள் 

- மு.முகமது பாட்சா*
28/03/2019

No comments:

Post a Comment

Popular Posts