கல்லறைக்குப் பிறந்த சொற்கள்

மண்வெட்டியில் இடற்பட்ட சில வார்த்தைகள்
பண்டையச் சொற்களை மீட்டியெடுக்கின்றன,
அமைதியாக உறங்குகின்றன
மக்கிப்போன எலும்புகள்,
வார்த்தைகளோடு புதைந்தவர்கள்
வார்த்தைகளின்றி எதையோ சொல்ல வருகிறார்கள்...
ஆடம்பரமென்பது
நிச்சயம் மண்ணிற்கடியில் இல்லை... ஆனாலும்
வார்த்தைகளின் பெரும் மூச்சு
எப்போதும் எதையோ சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
வார்த்தைகள் சுவாசிப்பதற்குக்
காற்றுமட்டுமே அவசியமில்லை...
அவை கல்லறைகளிலும் வசிக்கக்கூடியது.
அங்கிருந்தும் சில சொற்கள் பிறக்கத்தான் செய்கின்றன...
நாம்தாம்
வாசிப்பு அனுபவம் இல்லாமல் அவற்றை
அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.
- மு.முகமது பாட்சா*
30/03/2019

மண்வெட்டியில் இடற்பட்ட சில வார்த்தைகள்
பண்டையச் சொற்களை மீட்டியெடுக்கின்றன,
அமைதியாக உறங்குகின்றன
மக்கிப்போன எலும்புகள்,
வார்த்தைகளோடு புதைந்தவர்கள்
வார்த்தைகளின்றி எதையோ சொல்ல வருகிறார்கள்...
ஆடம்பரமென்பது
நிச்சயம் மண்ணிற்கடியில் இல்லை... ஆனாலும்
வார்த்தைகளின் பெரும் மூச்சு
எப்போதும் எதையோ சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
வார்த்தைகள் சுவாசிப்பதற்குக்
காற்றுமட்டுமே அவசியமில்லை...
அவை கல்லறைகளிலும் வசிக்கக்கூடியது.
அங்கிருந்தும் சில சொற்கள் பிறக்கத்தான் செய்கின்றன...
நாம்தாம்
வாசிப்பு அனுபவம் இல்லாமல் அவற்றை
அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.
- மு.முகமது பாட்சா*
30/03/2019
No comments:
Post a Comment