Monday, 18 March 2019

வேர்த்திரள்

வேர்த்திரள் 
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

உதிர்ந்த சருகின்மீது வீழும் 
இறகுக்கென்று ஒரு கதையிருக்கும்... 
மெல்லிய நரம்பினை மீட்டியதாகக் 
கொடிகள் அசைகின்றன... 
பால் கொடுத்த முலைக்காம்பின் நரம்புகளாய் 
வேர்கள் விதிர்க்க... 
வெட்டி வீழ்ந்த மரத்தில் சில கூடுகள்... 
கிளையொன்றில் நசுங்கிய முட்டை 
ஒரு சகாப்தத்தை இழந்ததாக அழுகிறது... 
அங்குப் பெய்யும் மழைக்கு 
இனி கண்ணீரென்று பெயரிடலாம்... 
சப்தக் கூடுகள் மௌனித்த அவ்வெளி 
இடுகாட்டின் பிரதிமை... 
நீங்கள் எப்போதும் தோண்டிப் பார்க்கலாம் 
வேர்த்திரள் 
சில கதைகளுடன் அங்கு இறந்து கிடக்கும். 

- முகமது பாட்சா*
17/03/2019

No comments:

Post a Comment

Popular Posts