Sunday, 31 March 2019

காற்றாடியின் கனவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நூலொன்றில் தொக்கிப்பறக்கும் 
காற்றாடியின் கனவில் 
என் இரகசியம். 
பறத்தலின் தூரம் நெடும் பாய்ச்சல்... 
நட்சத்திரங்கள் கையெட்டும் தூரத்தில் 
சுவாசக் காற்று ... 
அசைவும் நெளிவும் ஆனந்த தாண்டவம்... 
காற்றின் மொழி இசையில் இலயம்... 
மோகம் போகம் தலையின் உச்சம்... 
நானென்ற நான் ஆகாசம் 
அறுந்துவிழும் அந் நொடியில் 
வேண்டல் விரிகிறது 
சூட்சம நூலின் சுந்தர நேசிப்பு...

- முகமது பாட்சா*
29/03/2019

No comments:

Post a Comment

Popular Posts