
மின்னல்களின் வெளிச்சம்
இருட்டைக் கிழித்துவிடுகிறது...
பூரண வெளிச்சம்
உன் புன்னகையிலல்லவா
உட்கார்ந்திருக்கிறது....
வழியெங்கும்
பூக்கள் பூத்திருக்கின்றன
பாதைகள் மட்டும் முடியவேயில்லை...
யாருக்கான சங்கீதம்
தொலைவினில் கேட்கிறது...
சூஃபி பித்தனாய்த் தேடியலைகிறேன்...
பாத வெடிப்புகளில்
உனக்கான வரிகள் கவிதைகளாக...
- மு.முகமது பாட்சா*
01/04/2019
No comments:
Post a Comment