
ஆங்காரியாய் காளியின் நாக்கு
ஆயுதங்களாக நகங்கள்
அடுக்கடுக்காய்ப் பிணங்கள்
செவந்திருக்கும் வானம் உமிழும் எச்சம்
மிச்சமில்லாமல் தெரித்த அமிலம்...
இரத்த வாடை
எட்டியை விழுங்கும் ஆக்ரோசம்
எடுத்தவடி எழுந்திருக்கும் எரிமலை
இத்தனையும் புதைந்து
சமையற்கட்டில் ஒரு மௌனீஸ்வரி
கடுகு பொரிகிறது..
தீக்கமழ வாயுமிதக்கும் அடுப்பு.
- மு.முகமது பாட்சா*
01/05/2019
No comments:
Post a Comment