Sunday, 21 April 2019

ஏன் எம்மை கைவிட்டீர்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நீ உயிர்த்தெழுந்த நாளில்
மரணித்திருக்கிறார்கள் பிதாவே!
அவர்களின் உதிரத்தைத் தெளித்து
உம்மை உசுப்பிவிட்டவன்
சாத்தானாக மட்டுமே இருக்க முடியும்!
சிலுவைப் பாதையில்
இரத்தங்கள் இன்னமும் காயவில்லை...
போதி மரத் துண்டுகளை ஆணிகளாக்கி
தேகத்தில் அறைந்திருக்கிறார்கள்!
நீ எழுப்பிய வினாதான்
இன்னமும் நிறைந்திருக்கிறது இயேசுவே!
'பிதாவே ஏன் எம்மைக் கைவிட்டீர்?'

-மு. முகமது பாட்சா*

22/04/2019

No comments:

Post a Comment

Popular Posts