Wednesday, 17 April 2019

கறை ஆபத்தானது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தேங்காயை உருட்டிவிட்டு 
உலகம் 
உருண்டோடுவதாகச் சொல்கிறார்கள் 
எலுமிச்சைப் பழம் 
மந்திரித்து வைக்கப் படுகிறது... 
நரிகளெல்லாம் வாசலைத் தட்டி 
பழங்களைக் கொடுக்கின்றன ... 
வானத்தை நோக்கிச் சுடுகிறார்கள் 
வாக்களிக்கிறவன் பதுங்கிக் கொள்கிறான் 
வாக்குப் பெட்டிகளுக்குள் 
அச்சம் நிறைந்திருக்க 
காட்டெருமைகள் வனத்தை அசைக்கின்றன... 
தேவதூதன் முகத்தைக் கழுவ 
கோரைப் பற்கள் 
வெளியே நீளுகின்றன... 
விரல் நகங்களில் உதிரக்கறை... 
கறை மிகவும் ஆபத்தானது.

- மு.முகமது பாட்சா*
17/04/2019

No comments:

Post a Comment

Popular Posts