
மௌனத்தைக்
குடைந்து செல்லும் வண்டுகள் போல்
உன் நினைவுகள் ரீங்காரிக்கின்றன..
என் சப்தம் கேட்காதவெளி
உன் இதயத்தின் தூரம்.
என் துயரம் அலையும் பாலை
நேர்கோட்டில் செல்கின்ற நேசக்கானல்...
உன் பார்வையின் வெளிச்சம்
என் வழியின் இருட்டு...
பறவைகளின் அடர் சப்தசாரம்
வனத்தின் சங்கீதம்...
காதலென்பது கலிமாவின் மொழி...
மீசான் தட்டுகளில்
அலைமோதும் ஞானக்குழப்பம்
நானென்ற அகந்தை...
நேசம் சிதறாமல் அடைபட்ட மனதில்
எப்போதும் காதல் மயக்கம் .
மௌனத்தைக்
குடைந்து செல்லும் வண்டுகள் போல்
உன் நினைவுகள் ரீங்காரிக்கின்றன..
- மு.முகமது பாட்சா*
27/04/2019
No comments:
Post a Comment