
எனக்கான கேள்விகளை
ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டியிருக்கிறேன்
திறந்து பார்க்கும் நீங்கள்
ஆயுதங்கள் வைத்திருந்ததாகக்
கைது செய்கிறீர்கள்!
நான் நிழலோடு நடந்து போவதை
உளவோடு நடந்து போனதாக
உங்களின் செய்திக்குறிப்புகள் சொல்கின்றன...
எனக்கான கோபத்தை
ஒரு கொடியின் மீது திணித்துவிட்டுப்
பறக்க விடுகிறீர்கள்...
என் விரல்களைத் துப்பாக்கிகளென்று
வெட்டும் போதுதான் உணர்ந்தேன்...
கேள்விகளென்பது
பூட்டி வைப்பதற்கில்லையென்று...
காறி உமிழ்கிறேன்
அமிலம் வீசி விட்டதாக
இப்போது அலறிக் கொண்டிருக்கிறீர்கள்.
- மு.முகமது பாட்சா*
24/04/2019
No comments:
Post a Comment