
அஃதொரு ஆபாசப் படம்தான்.
பார்த்தவர்கள்
சற்றே வழுக்கி விழுகிறார்கள்...
இளமையின் திமிர்கள்
எக்கச்சமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
சருகாடை
அங்கத்தை விட்டு விலகி காற்றிலாட...
பார்ப்பவர்களின் புழுக்கம்
தேகத்தில் வியர்த்திருக்கிறது...
நிழலில் எடுத்த படம்தான் .
ஒப்பனைத் தொட்டவன்
சற்றே சிலிர்த்திருக்கலாம்...
காமிராவின் கண்ணோடு
கூடுதலாய் இரண்டு கண்கள்...
எத்துணை டேக் என்று தெரியவில்லை...
உச்சமாய்த் தொட்ட டேக்கில்
அவள் முழுசாய் உரிந்திருந்தாள்.
ஆடையை உடுத்திய பிறகுதான்
வெட்கத்தை மறைக்கப் பார்க்கிறாள்...
உடம்பு கூசத்தான் செய்கிறது...
மனசு என்னமோ
பார்த்துவிட்டு போ என்று வெறுக்கிறது.
- மு.முகமது பாட்சா*
14/04/2019
No comments:
Post a Comment