
அந்தப் பறவை
அநாதையாகக் கிடக்கிறது...
இறகுகளைப் பிடுங்கி
காதுகளைக் குடைந்து கொள்கிறார்கள்
அதன் மாமிசம் பகிர்ந்து கொள்ள
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது...
அதன் உதிரங்களில்
பிழைகள் நிறைந்திருக்கலாம்...
எச்சமிட்டவிடத்தில் எத்தனை எறும்புகள்
இறந்தனவென்பதுதான் கணக்கு...
அதன் உயரம்
தரை மட்டம்தான் என்பதை
இப்போது அஃது உணர்ந்திருக்கிறது...
ஆகாசம் இறங்கி வராதென்பது
நன்றாகவே தெரியும்...
ஆனாலும் பறப்பதை நிறுத்தினால்
பூமியும் காறி உமிழ்ந்து விடும்.
- மு.முகமது பாட்சா*
26/04/2019
No comments:
Post a Comment