Tuesday, 9 April 2019

துவாக்களின் பூக்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நான் இறந்துவிட்டதாக 
அலைப்பேசிகள் 
செய்திகளை விரைவாகக் கடத்துகின்றன... 
ஆச்சரியத்துடன் 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி 
இரங்கல் துஆ 
உறவுகளால் தூவப்படுகின்றது... 
அப்படியா! என்ற சில ஆச்சரியக்குறிகளோடு 
என்னவாயிற்று? என்ற 
கேள்விக்குறிகளும் இணைந்து கூடுகின்றன... 
போய்ச் சேரட்டும் என்பதும் கூட 
துவாக்களின் பூக்கள்தான்... 
அழுகையின் கண்ணீர்த் துளிகள் 
சந்தூக்கில் தூவும் பன்னீர் சாரல்கள்... 
என் எழுத்துகள் 
சுற்றி நின்று என்னை வாசிக்கின்றன... 
சுமந்து செல்லும் பாதையில் 
உதிர்ந்துகிடக்கும் 
வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறேன்... 
மண்ணறையில் 
என் கவிதையோடு நான் பேசிக் கொண்டிருக்க.... 
நீங்கள் கலிமாவோடு 
இறக்கிவிட்டுச் செல்லுங்கள்... 
உங்களின் துஆக்கள் 
சில வார்த்தைகளைக் கொண்டுவரட்டும்.

- மு.முகமது பாட்சா*
09/04/2019

No comments:

Post a Comment

Popular Posts