
எதை எதையோ செய்து பார்த்தார்கள்
எதுவுமே நடக்கவில்லை
கும்பிட்டார்கள் ,
குனிந்து கேட்டார்கள்
ஆரவாரம் செய்து ஊர்வலம் போனார்கள்
பழிகளைப்பேசி பாசாங்குச் செய்தார்கள்
நுண்ணறிவுத் துறையையே
நூலாக்கித் திரித்தார்கள்
மிரட்டியும் பார்த்தார்கள்...
தேர்தல் ரத்து என்று அறிவித்து
முகமூடி கழற்றினார்கள்...
கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல்
கேட்காததையெல்லாம் விடைந்தார்கள்..
பணத்தையும் இரைத்தார்கள்
இருந்தும்
பயத்துடன் தான் இருக்கிறார்கள்
ஒரு விரல் மந்திரம்
ஒற்றுமையாகப் புரட்சி செய்து விட்டால்!
-மு. முகமது பாட்சா*
17/04/2019
No comments:
Post a Comment