Thursday, 11 April 2019

பூமி இறக்கும் முன்பாக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், இரவு மற்றும் தண்ணீர்

பேரண்டப் பெரு வெளியில் 
எனக்கான வார்த்தைகளைத் 
தேடி அலைகிறேன்... 
வெளிச்சம் 
உன் பார்வையில் சிறு புள்ளி... 
நான் விளக்கைத் தேடும் 
விட்டில் பூச்சி... 
விளக்குகள் 
தீப்பொறியினைத் தேடுகின்றன... 
சூரியன் எரிகிறதென்பது 
அண்ட வெளிச்சத்தின் 
அப்பட்டமான கற்பனை... 
எந்தக் கோள்களுக்கும் 
நேரமில்லை 
ராசிகளைப் பார்த்துச் சுற்றிவர.... 
வாயுக்களால் மிதப்பது 
தேகம் மட்டுமல்ல 
பூமி என்ற பெரும் பந்தும் கூட... 
வார்த்தைகளுக்கும் 
காற்றுத் தேவைப் படுகிறது.... 
பூமி இறக்கும் முன்பாக 
தண்ணீரைத் தேடுகிறான் மனிதன்... 
இறுதிச் சொட்டு இல்லாமல் 
மிச்சமாய் மிதக்கும் ஒரு வார்த்தையில் 
நிச்சயம் வெளிச்சம் இருக்கும். 

- மு.முகமது பாட்சா*
12/04/2019

No comments:

Post a Comment

Popular Posts