Wednesday, 3 April 2019

நான் என்ன செய்யவேண்டும்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி

நான் என்ன செய்யவேண்டும் 
என்று சொல்லுங்கள்... 
இப்போது கூட 
ஒரு கவிதையைத்தான் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்... 
ஆனால் நிதர்சனம் 
வேறுமாதிரி இருக்கிறது... 
சாலைகள் 
பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன... 
எரித்தவன் 
சால்வையோடு போகிறான்... 
எதுவும் அதன் வழியிலில்லை... 
இணையங்கள் குறிகளோடு 
புணர்ந்து கொண்டிருக்கின்றன... 
காமம் 
சந்தையில் விற்கப்படுகிறது... 
நான் கவலைப்பட்டு 
என்ன ஆகப் போகிறது? 
பெட்ரோல் விலையும் 
காஸ் விலையும் 
மண்டைக்குள் குடையும் போது... 
வாசலில் நிற்கும் யாசகனை 
விரட்டுவதைவதைத் தவிர 
வேறு வழி தெரியவில்லை.... 
நிலங்களில் 
புதைந்த கால்களைப் பற்றி 
யாரிங்கு கவலைப் படுகிறார்கள்? 
நிஜத்தில் 
ஒவ்வொருவருடைய கால்களும் 
எங்கேயோ புதைந்திருக்கிறது... 
நான் என்ன செய்யவேண்டும் 
என்று சொல்லுங்கள்... 
இப்போது கூட 
ஒரு கவிதையைத்தான் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
04/04/2019

No comments:

Post a Comment

Popular Posts