Tuesday, 2 April 2019

எச்சில் இலைகள்


எச்சில் இலைகள் 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி

மரத்துப்போன மண்டைக்குள் 
கோபம் தாபங்கள் இறந்து கிடக்கின்றன... 
ஆசைகளைக் கழற்றிவைக்க 
யோகிகளைத் தேடிச் செல்கிறார்கள்... 
ஆசை 
அவர்களிடம்தான் 
அம்மணமாய்ச் சிரிக்கிறது... 
புத்த விகாரங்களெல்லாம் - இப்போது 
செல்வந்தர்களிடம் 
காட்சிப் பொருட்களாக மாறிவிட்டன... 
ரூபாய் நோட்டுகளில்தான் 
சாந்தி ஸ்தூபம் உயர்ந்து நிற்கிறது... 
வீதியில் வாழ்பவர்களை 
எச்சில் இலையென்று சொல்கிறீர்கள்... 
பிச்சைக்காரர்களிடம்தான் 
புத்தன் உட்கார்ந்திருக்கிறான் என்பதை 
மறந்து விட்டீர்கள்.

- மு.முகமது பாட்சா*
02/04/2019

No comments:

Post a Comment

Popular Posts