
இன்றும்
பாடைகள் போவதற்கு
தடைகள் இருக்கிறது!
தண்டவாளத்தில் உருள்வதெல்லாம்
தாழ்த்தப்பட்டவனின்
பிணம்தான்!
அம்பேத்கர் சிலைகளுக்கும்
காவல் தேவைப்படுகிறது
பெரியார்
கழுத்தை இழந்தாலும்
கைப்பிடியோடுதான் நிற்கிறார்.
இடுப்புத் துணிதான்
தோள்களில் ஏறியிருக்கிறது
கால்களில் செருப்புகளில்லை.
கீழவீதிகள்
மேலைத்தெருக்களில் வசிக்க
144 தடை உத்தரவு
இன்றுதான்
ஜெய்பீம் அம்பேத்கர் பிறந்த நாள்.
- முகமது பாட்சா*
14/04/2019
No comments:
Post a Comment