
எதிரெதிரே
ஆட்டத்தில் அமர்ந்திருக்கிறோம்
நீயும் தாயம் போடுகிறாய்
நானும் தாயம் போடுகிறேன்
சில எண்கள் உன்னை
ஏணியில் ஏற்றி விடுகின்றன..
சில எண்கள்
என்னை விழுங்கிவிடுகின்றன...
தாயமுருட்ட சகுனியின்
விரல்கள் தேவைப்படுகின்றது
ஏணியும் வேண்டாம்
பாம்பும் வேண்டாம் என்பதும்
ஓர் ஏகாந்த நிலை..
இருந்தாலும் வீடுபேறு அடைதல்தான்
முக்தி என்று சொல்கிறது
தாயக்கட்டைகள்...
ஆட்டத்தை விடமுடியாமல்
தொடர்கிறோம்...
இப்போது நான் ஏணியில்
ஏறிக்கொண்டிருக்கிறேன்.
பாம்பு நெளிந்துகொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
27/04/2019
No comments:
Post a Comment