
நானொரு
கதை சொல்லியாக அமர்ந்திருக்கிறேன்.
என்னைச் சுற்றிலும்
பல கதைகள் உட்கார்ந்திருக்கின்றன...
'ஒருவன் நடந்து போகிறான்...'
என்று தொடங்கும் அந்தக்கதை
உட்காருவதற்காகத்
திண்ணைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது...
தாகம் தணிக்க நுழைந்த வீட்டில்
ஒரு தெரு நாய் இறந்துகிடக்க ,
ஆடைகளை ஒருத்தி
சரி செய்து கொண்டிருக்கிறாள்.
இறைந்து கிடந்த காமத்தில்
தேசப்பிதாவின் புன்னகை என்னமோ செய்கிறது...
வலிகளை அழைத்துக் கொண்டு
அங்கிருந்து அவன் கடந்து போக..
அவளின் தனங்கள் அவனை உரசிச் செல்கின்றன...
பஞ்சடைந்த கண்களில்
பசி என்பது ஏதுவென்று யோசிக்கும் வேளையில்,
அவன் இதழ்க்கடையில் விழுந்த
அந்த மழைத்துளி ரசனைக்கானதல்ல...
அவன் அருகில் நின்றிருந்த அந்தக் கதை
பரிசுக்குரியதாக இருக்கலாம்...
நிச்சயம் அவன் பசிக்கு உரியது இல்லை.
- மு.முகமது பாட்சா*
22/04/2019
No comments:
Post a Comment