
எனக்குத் தேவை
ஒரு சில ரொட்டித்துண்டுகள் மட்டுமே
நீங்கள் பீர் அருந்திக்கொண்டு
நட்சத்திர விடுதிகளில் ஆலோசிக்கிறீர்கள்...
வீட்டை
நான்கு முளைக்கம்புகளால்
இறுகக் கட்டியிருக்கிறேன்...
ஏதேனும் சாலைகள் வந்து அதனைக்
களவாடிச் சென்றுவிடலாம்...
நானருந்தும் தேநீர் மிகவும் கசப்பானது
தேநீர்க் கடை வைத்திருந்தாலாவது
அதிபர் ஆகியிருப்பேன்...
கால்களுக்குச் செருப்புக் கேட்டால்
அரசியல் என்று நகைக்கிறீர்கள்...
வயிற்றில் கட்டும் ஈரத்துணிக்கே
வறுமை ஒழிந்ததென்ற கோஷம்....
கேள்விகளைக் கேட்ட பிறகுதான்
எங்களுக்கே தெரிகிறது
நாங்கள் தேச விரோதிகளென்று....
நாங்கள் ஏழைகளாகவே இருப்பது
உங்களுக்கு மிகவும் அவசியம்
இல்லையென்றால்
வறுமையை எப்படி ஒழிப்பீர்கள் ?
எனக்குத் தேவை
ஒரு சில ரொட்டித்துண்டுகள் மட்டுமே...
- மு.முகமது பாட்சா*
03/04/2019
No comments:
Post a Comment