Sunday, 28 April 2019

அதைவிட அபாயம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை

நாய்கள் 
தொடர்ந்து குரைத்துக் கொண்டேயிருக்கின்றன... 
அவள் 
என்னருகில் அச்சமாகவே அமர்ந்திருக்கிறாள்... 
காட்டேறி கதைகள் 
அவளுக்குள் நுழைந்து வெளியேறியிருக்கலாம்... 
இரவில் காகம் கரைந்து 
நானும் கூட இப்போதுதான் கேட்கிறேன்... 
எலிகள் தள்ளிவிட்ட தம்பளர்களின் சப்தம் 
இதயத்துடிப்பில் நுழைந்து அதிர்கிறது... 
பூனைகள் 
களவிப் பிறாண்டிக் கொண்டிருக்கின்றன... 
குழந்தைகள் அழுவதைப் போன்றே அலறல்கள்... 
'கொலை செய்வது அத்தனை சுலபமல்ல'... 
நாவல் காற்றில் படபடக்கிறது... 
விடிந்ததும் தெரிந்துவிடும் 
எங்களில் யார் இறந்திருக்கிறோம் என்று... 
இல்லையென்றால் 
தெருவில் ஒரு கொலை நடந்திருக்கக் கூடும்... 
அதைவிட அபாயம் 
கடன் காரன் கதவைத் தட்டுவதுதான். 

- மு.முகமது பாட்சா*
29/04/2019

No comments:

Post a Comment

Popular Posts