
பொய்களைத் திரட்டி வீசுகிறார்கள்
அது பறந்தோடி
குடிசைகளாகப் பார்த்து எரிக்கிறது...
பொய்கள் உருண்டு திரண்டு ரூபமெடுக்க
கைகளின் ஆயுதங்கள்
ரத்த முத்தங்களைச் சுவைக்கின்றன...
வர்ண அடுக்குகள்
இராட்சசம் பூசி
மெல்ல எட்டிப் பார்க்கிறது....
உதிரத் தீட்டுகளில்
ஓநாய்கள் நாக்குகளைப் போட்டுச் சுழற்ற...
வெட்டியானின் அழுகை
எரியும் கபாலங்களை அறைகிறது...
ஒரு யுகத்தின் கோபம்
ஓர் அருவாளுக்கும் கூடவா இல்லையென்று
நாடோடி பாடிச் செல்கிறான்...
கோணங்கியின் விரல்களில்
நகங்கள் முளைக்கத் தொடங்குகின்றன
ராஜபாட்
இன்னம் சற்று நேரத்தில் இறக்கலாம்.
- மு.முகமது பாட்சா*
20/04/2019
No comments:
Post a Comment