Monday, 8 April 2019

தூவலில் இரத்தவெழுத்துகள்


broken head painting statue க்கான பட முடிவு

ஒரு படிமத்தின் தலையைக் 
கையில் எடுத்து வைத்துக் கொண்டு 
உருவத்தை அழித்துவிட்டதாகப் 
பிதற்றிக் கொள்கிறார்கள்... 
உடைந்த படிமம் 
பல படிமங்களைப் பிரசவிக்கிறது.... 
படிமங்கள் பறவைகளாக மாறி 
சுற்றி வருகின்றன... 
பறவைகளின் நகங்கள் 
கத்திகளாக வடிவமைத்துக்கொள்ள 
தலையெடுத்தவன் தலையும் 
இப்போது 
ஒரு படிமமாகத் தரையிலுருளுகிறது
படிமத்தைத் தேடிய கவிதையொன்று 
அதனையே படிமமாக்கி 
புரட்சியொன்றை எழுதிக் கொண்டிருக்க
என் தூவலில் இரத்தவெழுத்துகள்.

- மு.முகமது பாட்சா*
09/04/2019

No comments:

Post a Comment

Popular Posts