
என் இதயம்
தனியாக நடந்து போகிறது...
இருளும் துணைக்கு
விரல்கள் பிடித்து நடக்கின்றது...
கனவின் மொழியோ காலில் நழுவ
கற்பனையெல்லாம் உதிர்கின்றது...
சிறகுகள் இழந்த நிழலும் கூட
உன்னைத் தேடி நடக்கிறது...
மொழியின் சுவர்கள் தாங்கிப் பிடிக்க
முகவரித் தேடி அலைகின்றேன்...
விழுந்திடும் மரத்தின்
நம்பிக்கையாய் உன்
விழுதுகள் பிடித்தே நிற்கின்றேன்...
- மு.முகமது பாட்சா*
14/04/2019
No comments:
Post a Comment