Friday, 12 April 2019

யார்தான் நிர்வாணம் ? (சுபைனா)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சங்கீத வாய்ப்பாட்டிற்குள் 
அடங்காத அந்த வரிகளைத்தான் 
நீ கவிதையென்று கொண்டாடுகிறாய் சுபைனா! 
ஒரு நீண்ட சுவரின் ஒரு முனையில் நீயும் 
மறுமுனையில் நானும் பார்த்துக் கொள்கிறோம்... 
இடையினில் பார்வைகளெழுத 
ஒரு நிலா தேவைப்படுகிறது... 
இருட்டை வெளிச்சமென்று கொண்டாடுகிறோம்... 
ஒரு வெளிச்சம் 
இருட்டறைக்குள் தவம் செய்ய நுழைகிறது... 
நீண்ட  சுவரின் இடைவெளிகளில் 
விஷ விருட்சங்கள் வேர்களைப் பரப்புகின்றன... 
எனக்குள்ளிருந்த நீ 
அந்த வரிகளைத்தான் 
இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறாய்... 
நான் நகர்ந்த விடத்தில் 
பாம்பின் தடமொன்று படர்ந்து கிடக்கக் 
கூடவே 
பாதியாக நாம் சுவைத்த ஓர் ஆப்பிள் கனியும். 
இப்போது யார்தான் நிர்வாணம் சுபைனா?

- மு.முகமது பாட்சா*
12/04/2019

No comments:

Post a Comment

Popular Posts