Monday, 8 April 2019

என்ன செய்வேன்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

என்னிதயம் இடையில் 
நின்று போனால் என்ன செய்வேன்? 
உன் கண்கள் என்னிடம் 
பெரும் கதையொன்றைச் சொல்கிறது 
காலமென்னை 
தின்றுவிட்டால் என்ன செய்வேன்? 
நின்ற இதயத்தைக் 
கிள்ளிவிட்டுப் பின்னால் தொடர்வேன்... 
தனியாக நடந்து போகிறேன் 
உன் வெளிச்சம் முன்னால் செல்கிறது... 
பாதைகளைப் பதம் செய்கிறேன் 
என் சுவாசம் உன்னோடு நடப்பதற்கு... 
நானொரு கிழிந்த புத்தகம் 
உன் விரல்கள் 
படுவதற்காகக் காத்திருக்கும் பொக்கிசம். 
என்னிதயம் இடையில் 
நின்று போனால் என்ன செய்வேன்?

- மு.முகமது பாட்சா*
04/04/2019

No comments:

Post a Comment

Popular Posts