Friday, 19 April 2019

இரவை காவல் காக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம், இயற்கை மற்றும் வெளிப்புறம்

அப்பாடா! 
சற்று நிம்மதியாகக் கண்மூடுகிறேன் 
காந்தி ஊர்வலம் சென்று கொண்டிருக்க 
ஹிட்லர் நாஜி படைகளை 
நிறைத்துக் கொண்டிருக்கிறான்... 
நைஜீரியா குழந்தைகள் 
மண் ரொட்டி செரிக்காமல் இறக்க... 
இறந்த குழந்தையை வல்லூறொன்று 
கொத்திக் கொண்டிருக்கிறது... 
சிலையொன்றுக் கவிழ்ந்து 
நர்மதை கடலாய்ப் பிரளயமெடுக்க... 
கடல் உள் வாங்கிப் பெரு மூச்சு விடுகிறது... 
சாத்தான் தன் கண்களை 
அகல விரிக்கும் அவ்வேளையில் 
வாக்குப் பெட்டிகள் நிறம் மாறுகின்றன...
கனவாக நகர்ந்திட
இரவை நான் காவல் காக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
19/04/2019

No comments:

Post a Comment

Popular Posts