சந்தூக்கு

சற்று முன்தான்
மௌத்து என்ற சொல்லிற்கு
மாறிக் கொண்டான்...
ஆடையை மாற்றிக்
கிடத்தி வைத்திருக்கிறார்கள்...
கைபிடித்தவள்
கடந்த காலத்திற்குச் சென்று
அழுது கொண்டிருக்கிறாள்...
அவளோடு பயணப்படும் வார்த்தைகள்
வருபவர்களையும்
கட்டித் தழுவிப் புலம்புகிறது...
குளிர் பதனத்தில்
அதிகமாகவே உறைகிறான்...
கபன் விட்டவர்கள்
கஸ்தூரியைத் தெளிக்கிறார்கள்...
கபருக்குள் கலிமா இறங்குகிறது...
இறக்கிவிட்ட சந்தூக்கு
யாரை அழைத்துவர
அவசரமாகப் புறப்படுகிறது?
கல்லறைச் செடிகள் இன்னமும்
கிளைவிட்டிருப்பது
யாருடைய கபருக்காக ?
சாம்பிராணியின் புகை
அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
02/07/2019

சற்று முன்தான்
மௌத்து என்ற சொல்லிற்கு
மாறிக் கொண்டான்...
ஆடையை மாற்றிக்
கிடத்தி வைத்திருக்கிறார்கள்...
கைபிடித்தவள்
கடந்த காலத்திற்குச் சென்று
அழுது கொண்டிருக்கிறாள்...
அவளோடு பயணப்படும் வார்த்தைகள்
வருபவர்களையும்
கட்டித் தழுவிப் புலம்புகிறது...
குளிர் பதனத்தில்
அதிகமாகவே உறைகிறான்...
கபன் விட்டவர்கள்
கஸ்தூரியைத் தெளிக்கிறார்கள்...
கபருக்குள் கலிமா இறங்குகிறது...
இறக்கிவிட்ட சந்தூக்கு
யாரை அழைத்துவர
அவசரமாகப் புறப்படுகிறது?
கல்லறைச் செடிகள் இன்னமும்
கிளைவிட்டிருப்பது
யாருடைய கபருக்காக ?
சாம்பிராணியின் புகை
அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
02/07/2019
No comments:
Post a Comment