Thursday, 11 July 2019

விலையானது ஓவியம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்த ஓவியம் 
கோடுகளால் சில கதைகளைப் பேசியது... 
பார்வையாளர்கள் 
சில கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள் 
ஆத்ம தரிசனம் என்று 
ஒருவன் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான்... 
அடங்காத வன்மம் என்று 
ஒருவன் விளக்கம் பகிர்ந்தான்... 
விலங்குகளின் உடையணி நாகரீகம் 
எத்தனை அருமை என்று 
ஒருவன் சிலிர்க்க... இதிகாசக் காலம் 
இடறி விழுந்து கொண்டிருந்தது...
ஆபாசம் அழகென்றும் வசனம் 
வண்ணங்களைத் தெளித்தவன் வரைவை 
மறந்துவிட்டான் எனச் சிலர் சிரிக்க 
விலையானது ஓவியம்.. 
பெரும் ரகசியத்தை ஏந்திக்கொண்டு.

- மு. முகமது பாட்சா* 
11/07/2019

No comments:

Post a Comment

Popular Posts