கவிச்சி

சாத்தான் எப்போதும் தன்னை
கடவுள் என்றே
பிரகடனப் படுத்திக் கொள்கிறான்.
அவனது கைகளிலிருந்து
ஏதாவது ஒரு தீர்த்தம்
வழிந்துகொண்டே இருக்கிறது...
நரகத்தின் வாசலை
அலங்கார வார்த்தைகள் கொண்டு
அழகு படுத்துகிறான்...
உதிரத்தைத் தெளித்து
அவன் பூக்களை வரையும் போது
நாங்கள்
இரசிக்கத்தான் செய்கிறோம்...
வண்டுகளுக்காக
அவன் தன்
நாக்கையே வீசியெறிகிறான்...
அவன் ஆசனத்தினருகில்
அத்தர் தெளித்துக் கொண்டிருப்பவன்
உதிரத்தின் கவிச்சியால்
எப்போதோ உயிரை விட்டவன்...
தலைகளைக்
கைகளில் வைத்துக்கொண்டு
வரிசையில் நிற்கிறோம்
அவனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக.
கடாட்சம் வழங்கக்
கத்திகள்
தயார் நிலையில் இருக்கின்றன.
- மு. முகமது பாட்சா*
14/07/2019

சாத்தான் எப்போதும் தன்னை
கடவுள் என்றே
பிரகடனப் படுத்திக் கொள்கிறான்.
அவனது கைகளிலிருந்து
ஏதாவது ஒரு தீர்த்தம்
வழிந்துகொண்டே இருக்கிறது...
நரகத்தின் வாசலை
அலங்கார வார்த்தைகள் கொண்டு
அழகு படுத்துகிறான்...
உதிரத்தைத் தெளித்து
அவன் பூக்களை வரையும் போது
நாங்கள்
இரசிக்கத்தான் செய்கிறோம்...
வண்டுகளுக்காக
அவன் தன்
நாக்கையே வீசியெறிகிறான்...
அவன் ஆசனத்தினருகில்
அத்தர் தெளித்துக் கொண்டிருப்பவன்
உதிரத்தின் கவிச்சியால்
எப்போதோ உயிரை விட்டவன்...
தலைகளைக்
கைகளில் வைத்துக்கொண்டு
வரிசையில் நிற்கிறோம்
அவனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக.
கடாட்சம் வழங்கக்
கத்திகள்
தயார் நிலையில் இருக்கின்றன.
- மு. முகமது பாட்சா*
14/07/2019
No comments:
Post a Comment