
நானொரு பறவையென்று நினைத்தால்
அஃது உங்களின் கோளாறு...
சற்றுமுன்தான் ஒருவனைப் பார்த்துவிட்டு
பூனையாகப் பதுங்கிச் சென்றேன்...
ஆனாலும் விசித்திரம்
அப்போது என் நிழல் புலியாக இருந்தது...
அப்படித்தான் நேற்று
மனைவியிடம் கரடியாக மாறி கத்தினேன்
அவள் முயலாக மாறி விதிர்த்தாள்
என் நிழல் சாத்தானாக மாறியிருந்தது...
குரங்காக மாறி
நான் தாவிக் கொண்டிருந்த போது
சாலையிலொருத்தி மலராகச் சிரித்தாள்...
என் நிழல்தானே..
வேறென்ன பன்றியாகத் திரிந்தது...
இப்போது நான்
நானாக இருந்ததைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நீங்கள் எப்படி?
- மு.முகமது பாட்சா*
26/07/2019
No comments:
Post a Comment