
இரவின் பிரமைக்குள்
ஒரு நீண்ட மொழியாடல் உறைந்திருக்க....
உனக்கும் எனக்குமான
பார்வைகளின் இடைவெளியில்
சில பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன....
ஈரம் உலர்த்தும் பறவைகள் போல்
சிலிர்த்து விரல்களைக் கோதியெடுக்கிறோம்...
ஆயுள் பிரபந்தம் கோர்த்து
மெல்லிய பாடலொன்று அரங்கேற...
விலா எலும்புகளின் இசைக்கூட்டிலிருந்து
தம்பூரா மீட்டும் வலி இழைகிறது...
கச்சை நழுக்குமிரவு மிச்சமாய்ச் சுவைக்க
எச்சில் இழையாடுகிறோம்...
இன்னிசைக்குள் நுழையும் பிசுபிசுப்பில்
வியர்வை முகிழ்த்தம் விழைய
உனக்கும் எனக்குமான சங்கீதக் கீர்த்தனங்கள்
நம் உதிரத்துளிகளில் ஒட்டிக்கொள்ள...
இரவைத் துடைக்கிறது
பிரபஞ்சத்தின் ஒரு பெரும் நாக்கு.
- முமுகமது பாட்சா*
19/07/2019
No comments:
Post a Comment