
யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?
அவரவர்கள்
நடந்து சென்று கொண்டிருக்க..
ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான்
அவன் மணிக்கட்டில்
சில சாமிக் கயிறுகளைத் தவிர
வேறொன்றுமில்லை....
யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?
அமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்த
தண்ணீர் லாரி
பெண்ணையும் இறக்கிவிட்டுச் செல்கிறது...
காலிக்குடங்கள்
வீதியில் புரண்டு கொண்டிருந்தன...
யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?
தமிழ் என்பதில்
ழகரம் செத்து தமியானது
இந்தியில் அரசுத் தேர்வுகள்...
தும்கு இந்தி மாலும்?
யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்
ஆர்ட்டிக்கிள் 15 காணவில்லை
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?
சற்று முன்
இந்தக் கவிதை கைது செய்யப்பட்டுள்ளது...
தேச விரோத செயல்களில்
ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு...
- மு. முகமது பாட்சா*
16/07/2019
No comments:
Post a Comment