Saturday, 6 July 2019

நுழைபுலம் இல்லாதவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நுழைபுலம் இல்லாமல் நுழைகிறேன் 
கவிதைகளின் தொகுப்பிற்குள் 
சொற்கூட்டங்கள் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன... 
அதிலிருந்து வந்த காகம் 
எலியாகப் பாவித்து 
என்னைக் கொத்தித் தின்னுகிறது... 
நான் மலராக மாறி 
அவளின் நாசியை நுகர்கிறேன்... 
என் நிழலை 
ஒருவன் ஆய்வு செய்து கொண்டிருக்கிறான்... 
நான் கடலாக இருப்பதைவிட 
மீனாக நீந்துவதை நதி விரும்புகிறது... 
நிர்வாணத்தை 
சில சொற்கள் கேலிப் பேசுகின்றன.. 
ஆடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் 
அடுத்த பக்கம் நிர்வாணமாக இருந்தது... 
அலமாரியில் புத்தகம் உறங்கிக் கொண்டிருக்க 
நான் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறேன் 
எழுத்துகள் என்னோடு 
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன...

- மு. முகமது பாட்சா*
06/07/2019

No comments:

Post a Comment

Popular Posts