
மஜ்னூவின் கைகளில்
லைலாவின் முத்தங்கள்
கல்பில் ஆடுகிறாள்
காதலை அவன் கபுறூவில் தேடுகிறான்...
ஏளனத்தின் எச்சில்கள் சுற்றிலும் குளம் கட்ட
எலும்புருக்கி நோயின் பெயர் 'காதல்'
எழுதாத வார்த்தைகளை நிறைத்தவன்
எழுதி வைத்த குறிப்பில்
இறைவனின் பெயரும் 'காதல்'
தேடலின் முடிவில் சந்திப்பு நிச்சயம்
காதலின் தளம் ' கபுறூ'
கலிமா விரைகிறது தூதுவத்தின் மொழியேந்தி
கல்லறையின் ஈரம்
காதலர்களின் காயாத முத்தம்...
- மு. முகமது பாட்சா*
06/07/2019
No comments:
Post a Comment