
விதுரம் கோர்த்த மழையில்
கண்களை ஊசலாட்டிக் கொண்டிருக்கிறேன்...
நினைவுகளை அகலத் திறந்து
நரம்புக்கருவிகளை இசைக்கிறாய்....
தோல் கருவியில்
உரசும் விரல்களாய்
வார்த்தைகள் உழல்கின்றன...
பிரிவின் மௌனம் பேரண்டத்தின் பூகம்பம்...
அடவுகளில்
ஆடைக் கட்டும் பெரும் நிழலில்
நான் - நீ
நகர்ப் பறையின் உச்ச ஆரோபிதம்.
- மு.முகமது பாட்சா*
22/07/2019
அருமை சகோ
ReplyDelete