Monday, 29 July 2019

உப்புமா கம்பெனி



'உப்புமா கம்பெனி' 
அந்த நிறுவனத்தின் பெயர் 
அப்படித்தான் எழுதப்பட்டிருந்தது... 
இப்படியெல்லாமா பெயர் வைப்பார்கள்! 
வியந்து போனேன்... 
ஒரு பிளேட் உப்புமா கேட்டு 
உள்ளே நுழைந்த போது 
அஃதொரு 
கன்சல்டண்ட் கம்பெனி என்று சொன்னார்கள்... 
உப்புமா எங்குக் கிடைக்கும்? 
என்று ஆராயத் தொடங்கினார்கள்.... 
அதன் நிர்வாகி 
உப்பு கிடைக்கும் இடங்களையும் 
மாவு கிடைக்கும் இடங்களையும் 
பரிந்துரைக்கத் தொடங்கினார்.... 
ரவைதானே அதற்கு வேண்டும்? 
என்று கேட்டபோது... 
அவரது இணையம் 
பஞ்சாபிலுள்ள 
ரவை கம்பெனிகளைப் பட்டியலிட்டது... 
உப்புமாவுக்கு 
இத்தனை அலப்பறையா என்று நாங்கள் 
எழுந்து கொண்டபோது... 
செகரெட்டரி 
அவரது மேசையின் மேல் 
ஒரு பிளேட் 
உப்புமாவை வைத்துவிட்டுச் சென்றாள்.

- மு. முகமது பாட்சா*
27/07/2019

No comments:

Post a Comment

Popular Posts