
சன்னலைத் திறந்து கொண்டு
காற்று நுழைகிறது
அதற்கு அவள்
தென்றலென்று பெயரிட்டு
முடிக்கற்றையை அலையவிடுகிறாள்..
நானதற்கு
தேநீர் சுவாசமென்று பெயரிடுகிறேன்...
வெளியே பார்வையை நீட்டி
பூவொன்றைப் பறித்து அவளிடம் கொடுக்கிறேன்
அறை மணக்கிறது...
பார்வையால் திருடுகிறாள்
பாசாங்கு செய்யாமல் களவு போகிறேன்...
முத்தங்களைப் பறித்து
புத்தகங்களின் பக்கங்களை நிரப்புகிறேன்...
அவள் காலிடிக்கிறது
ஒடுங்கிப் படுங்கள் என்றாள்...
விழித்துக் கொண்டேன்
கற்பனைபோல் இருப்பதில்லை நிஜம் .
- மு.முகமது பாட்சா*
03/07/2019
No comments:
Post a Comment