Wednesday, 3 July 2019

என்னோடு நான் இருந்தால்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

என்னோடு நான் கை குலுக்கிக் கொள்கிறேன் 
சற்றுமுன் என்னோடு பேசிக் கொண்டிருந்த போதுதான் 
இருவரும் அடித்துக் கொண்டோம்... 
என்னை அவன் 
இப்போதும் கூடக் கேவலமாகத்தான் பார்க்கிறான்... 
அவனுக்கு நானென்றாலே கசப்பாகத்தான் இருக்கிறது... 
நான் என்றுமே என்னைத் திட்டியதில்லை... 
ஆனால் அவன் அப்படியில்லை... 
என்னை அசிங்கமாகத் திட்டவும் செய்வான்... 
ஒரு நாள் அவனை விட்டு 
விலகிப் போய்த் தனியாக உட்கார்ந்திருந்தேன்... 
அவனாக வந்து தழுவிக் கொண்டவன் 
இனி இதுபோல் நடக்கவே நடக்காதென்றான்... 
அஃது அன்று நாள் மட்டும்தான் நிகழ்ந்தது 
அவன் எப்போதுமே அவனாகத்தான் இருக்கிறான்... 
ஆனால் நான் நானாக இருக்க முடிவதில்லை.

- மு. முகமது பாட்சா*
03/07/2019

No comments:

Post a Comment

Popular Posts