அந்தக் கவிதையை
இப்படித்தான் எழுதவேண்டும் என்று
நிபந்தனைகள் விதித்திருந்தார்கள்...
ஆரம்பத்தில்
'ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டியாடும் நிலா'
என்ற வரியை
நியமனமும் செய்து விட்டார்கள்...
காதலுக்குள் ஊடுருவி
சிலர் அழகாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருக்க
ஒருவன் தாயை
அதில் தாலாட்டிக் கொண்டிருந்தான்...
நிலாவை ஊஞ்சல்தான்
சிறை வைத்திருப்பதாக ஒருவன்
குற்ற நகல் எழுதிக் கொண்டிருக்க.....
ஒருவன்
பூமியைக்காட்டி ஒருத்தி
நிலாவுக்குச் சோறூட்டுவதாகச் சிலாகித்தான்...
என் கைகளை உதறித் தள்ளிய தூவல்
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டியாடும் நிலா
ஊஞ்சலாடும் போதுதான்
பூமி இங்குப்
பற்றி எரிந்து கொண்டிருந்ததாக எழுதிவிட்டு
கூர்ப்பை உடைத்துக் கொண்டு
கீழே விழுந்து இறந்தது.
- மு.முகமது பாட்சா*
28/07/2019
இப்படித்தான் எழுதவேண்டும் என்று
நிபந்தனைகள் விதித்திருந்தார்கள்...
ஆரம்பத்தில்
'ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டியாடும் நிலா'
என்ற வரியை
நியமனமும் செய்து விட்டார்கள்...
காதலுக்குள் ஊடுருவி
சிலர் அழகாக ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருக்க
ஒருவன் தாயை
அதில் தாலாட்டிக் கொண்டிருந்தான்...
நிலாவை ஊஞ்சல்தான்
சிறை வைத்திருப்பதாக ஒருவன்
குற்ற நகல் எழுதிக் கொண்டிருக்க.....
ஒருவன்
பூமியைக்காட்டி ஒருத்தி
நிலாவுக்குச் சோறூட்டுவதாகச் சிலாகித்தான்...
என் கைகளை உதறித் தள்ளிய தூவல்
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டியாடும் நிலா
ஊஞ்சலாடும் போதுதான்
பூமி இங்குப்
பற்றி எரிந்து கொண்டிருந்ததாக எழுதிவிட்டு
கூர்ப்பை உடைத்துக் கொண்டு
கீழே விழுந்து இறந்தது.
- மு.முகமது பாட்சா*
28/07/2019
No comments:
Post a Comment